ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இளைஞர் காங்கிரஸ் திட்டம்!
Monday,September,05,2011
சென்னை : ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதையடுத்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இது இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை 8 வாரம் தள்ளிவைக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் மூவரின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சைதாப்பேட்டை, வேப்பேரியில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், தார் பூசியும் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. போலீசார் அவற்றை உடனடியாக அகற்றி, காங்கிரசாரை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டம் வகுத்து வருகின்றனர்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தமிழகத்தில் ஆதரவு பெருகி வரும் நிலையில், மற்றொரு புறம் காங்கிரசாரின் போராட்டங்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் படுகொலை படங்களுடன் ‘இது நியாயமா?’ என்ற கேள்விக்குறியுடன் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment