Friday, September 02, 2011
பலாலி விமானநிலையத்தை விஸ்தரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்திய அரசின் முழுமையான பங்களிப்பின் கீழ் நடைபெறும் இவ்வேலைத்திட்டத்திற்குப் பகுதியளவு பணம் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் விரைவில் மேலும் ஒரு தொகை நிதியை இலங்கை அரசிடம் இந்தியா கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி விமானநிலையத்தில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தபின்னர் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அரசு எதிர்பார்த்துள்ளது.பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என வெளியான தகவல்கள் தொடர்பாக யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கேட்டபோது,நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. அபிவிருத்தியை நோக்கி நாம் பயணிக்கின்றோம். நாட்டின் அபிவிருத்தி கருதியே விமானநிலையம் விஸ்தரிக்கப்படுகின்றது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment