Friday, September 02, 2011
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதிமுதல் 30ஆம் திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படலாமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் மாபெரும் பேரணியொன்றை ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள், சிங்கள மக்களைக் கொண்டு நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 13ஆம் திகதி ஜெனிவா ஐ.நா. தலைமையகக் கட்டடத்தின் முன் கூடுமாறு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்,சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை எதிர்த்து இவர்கள் பெரும் பேரணியொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
இதேவேளை, ஜெனிவாவில் எதிர்வரும் 19ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு புலம்பெயர் புலிகளின் செயற்பாட்டாளர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் செயற்பாட்டாளர்களும் பெருந்திரளானோர் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment