Friday, September 02, 2011
புலிகளின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்-(புலி)சிவாஜிலிங்கம் கோரிக்கை!
நாட்டின் சகல அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும் எனவும், புலிகளின் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்காது, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமையின் ஊடாக வடக்கு கிழக்கில் அரசாங்கம் இராணு ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை தெளிவாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என 800 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி போராளிகளின் விடுதலை தொடர்பான அரசாங்கப் புள்ளி விபரத் தரவுகளில் முரண்பாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment