Thursday, September 08, 2011புலிகள் இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகள் முற்றிலும் தவறானது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கிறது.
கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அடிப்படையில் சில தவறுகளை கொண்டுள்ளதுடன் வலுவற்றதாகவும் காணப்படுவதாக அறிக்கை ஒன்றி்ன் மூலம் சபை கருத்து வெளியிட்டுள்ளது.
சுயாதீன சர்வதேச விசாரணைக்கு எதிரான துரும்பு சீட்டாக கடந்த இரண்டு வருடங்களாக கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் வலயத்திற்கான பணிப்பாளர் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்கவிடம் வினவியபோது, தமது கருத்துக்கள் மற்றும் யோசனைகள் குறித்து சாட்சியங்களை முன்வைக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபைக்கு ஏற்கனவே ஆணைக்குழு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார்.
மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட அதே காலப்பகுதியில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
எனினும் துரதிஷ்டவசமாக மன்னிப்பு சபை அந்த அழைப்பினை நிராகரித்ததாகவும், அதன் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment