Thursday, September 8, 2011

நிபுணர்குழு அறிக்கை நம்பகத்தன்மையற்றது–இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா!

Thursday, September 08, 2011
நிபுணர் குழு அறிக்கை நம்பகத்தன்மை அற்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெள்ளையோ, கறுப்போ அல்லது வேறும் ஏதேனும் நிறத்திலான கொடியையோ ஏந்தி சரணடைய வரும் எவரையும் படையினர் கொல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டு மக்கள் என்ற ரீதியில் சரணடைய விரும்பும் அனைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படும் எனவும், வெளிநாட்டவர்களைப் போன்று நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

600 சிறுவர் போராளிகள் உள்ளிட்ட 11000 பேர் சரணடைந்ததன் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செனல்4 ஊடக ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையிட்ட போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment