Thursday, September 08, 2011வவுனியா விளக்கமறியல் சிறைச்சா லைக்குள் வைத்து சிறைக் காவலர்கள் ஒருவரும் அவரது உதவியாளரும் சிறைக் கைதிகளினால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் நேற்று புதன் பகல் வவுனியா பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளினால் இவர்கள் தாக்கப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கான தண்ணீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டமை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இம்மோதல் ஏற்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, சிற்றூழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனை தடுக்கச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் குறித்து வவுனியா சிறைச்சாலை அதிகாரி ராஜகருண, அநுராதபுர சிறைச்சாலை அதிகாரி ஜெகதிஸ்ஸ ஆகியோருக்குத் தெரியவரவே அவர்கள் கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடி பின்னர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment