Thursday, September 8, 2011

சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது!

Thursday, September 08, 2011
கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் வரையில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க முடியாது.

இந்த கால அவகாசத்தை 48 மணித்தியாலங்கள் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சட்டத் திருத்தம் குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது.

விசாரணைகளை நடத்துவதற்கு 24 மணித்தியாலங்கள் போதுமானதல்ல என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

No comments:

Post a Comment