Thursday, September 8, 2011

அப்சல்குரு தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்குதல் நடத்துவோம்: குண்டு வைத்த தீவிரவாதிகள் மிரட்டல்!

Thursday, September 08, 2011
டெல்லி ஐகோர்ட்டின் ஐந்தாம் எண் வாசலில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியானார்கள். 76 பேர் படுகாயம் அடைந்தனர். சூட்கேசில் சுமார் 2 கிலோ எடையுள்ள அமோனியம் நைட்ரேட் கலவையிலான குண்டை வைத்து, நாசவேலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

சூட்கேஸ் வெடிகுண்டு குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதா? அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்யப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

ஐகோர்ட்டே குலுங்கும் வகையில் குண்டு வெடித்ததால் அது ஆர்.டி.எக்ஸ் ரகமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. தடயவியல் அறிக்கை இன்று கிடைத்ததும், இவற்றுக்கு விடை கிடைக்கும்.

இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டு குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹர்கத் உல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றனர். இந்தியன் முஜாகிதீன்கள் மூலம் அவர்கள் இந்த நாச வேலையை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள இ-மெயிலில் கூறி இருப்பதாவது:-

டெல்லி ஐகோர்ட் வாசலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். எங்களது கோரிக்கையை வலியுறுத்தவே இந்த குண்டு வெடிப்பை நடத்தினோம். எங்கள் கோரிக்கை என்னவென்றால், முகம்மது அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.உடனடியாக எங்கள் கோரிக்கை நிறைவேற்றப் பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்.

இந்தியாவில் உள்ள முக்கிய ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு மீது தாக்குதல் நடத்துவோம்.

இவ்வாறு தீவிரவாதிகள் அனுப்பியுள்ள இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment