Thursday, September 08, 2011
சென்னை : பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்ற 58&வது பிலிம்பேர் விருது விழா, சன் டி.வி.யில் ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. வருடந்தோறும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வரும் பிலிம்பேர், கடந்த ஆண்டுக்கான விருது விழாவை ஐதராபாத்தில் நடத்தியது.
இதில், சிறந்த ஒளிப்பதிவு (ரத்னவேலு), சிறந்த உடை வடிவமைப்பு (மனீஷ் மல்கோத்ரா), சிறந்த புரொடக்ஷன் டிசைன் (சாபு சிரில்) ஆகிய 3 விருதுகளை சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்’ படம் அள்ளியது. சிறந்த நடிகராக விக்ரம் (ராவணன்), சிறந்த இயக்குனராக வசந்தபாலன் (அங்காடித் தெரு), சிறந்த நடிகையாக அஞ்சலி (அங்காடித்தெரு), சிறந்த படமாக பிரபுசாலமன் இயக்கிய ‘மைனா’, சிறந்த இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் உட்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சினிமா பிரபலங்கள் பல்வேறு விருதுகளை பெற்றனர். நடிகர், நடிகைகளின் புதுமையான கலைநிகழ்ச்சிகளும் இவ்விழாவில் ஆர்ப்பாட்டமாக நடந்தன.
சிரஞ்சீவி, விக்ரம், நாகார்ஜுனா, வெங்கடேஷ், மம்மூட்டி, இந்தி நடிகை ரேகா உட்பட அனைத்து தென்னிந்திய நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்த கோலாகல விழா, சன் டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

No comments:
Post a Comment