Thursday, September 22, 2011

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் இரண்டு வருட காலத்துக்குள் முற்றாக அகற்றப்பட்டு விடும்-நிஹால் ஹப்புஆராச்சி!

Thursday, September 22, 2011
வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அனைத்தும் இரண்டு வருட காலத்துக்குள் முற்றாக அகற்றப்பட்டு விடும் என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் 75 சதவீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், சுவிஸ் பவுண்டேசன் போ மைன் எக்ஸன் என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் இலங்கைத் தலைமை அதிகாரி ரொபின்சன் நேற்றுத் தெரிவித்திருந்த கருத்தினை முற்றாக நிராகரித்துள்ளார்.

வடக்கில் நிலக்கண்ணி வெடிகள் பல இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இவற்றினை முற்றாக அகற்ற பத்து வருடங்கள் தேவைப்படும் எனவும் கூறியிருந்தார்.

அவரின் இந்தக் கூற்றை முற்றாக நிராகரித்துள்ள இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர், இவ்வாறு அவர் தெரிவிப்பதனை வடக்கில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றிக் கொண்டிருப்போருக்கு எதிராகக் கூறும் கருத்தாகவே கொள்ள முடியும். இவ்வாறு பத்து வருடங்கள் தேவையென அவர் குறிப்பிட்டது எந்த அடிப்படையில் என்றும் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment