Thursday, September 22, 2011புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்களுக்காக இருதரப்பினரையும் தண்டிக்க வேண்டும் என 17 அரச சார்பற்ற நிறுவனங்கள்மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கூட்டான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக திவய்ன பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் திவய்ன இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
கடந்த 16 ஆம் திகதி 17 அரச சார்பற்ற நிறுவனங்களின் இந்த அறிக்கையானது நவநீதம்பிள்ளையிடம் மிகவும் இரகசியமான முறையிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமது கோரிக்கையை அவை அவசரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது.
ஐக்கிய நாடுக்ள சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கைகையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நவநீதம்பிள்ளையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் திவய்ன தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment