Wednesday, September 28, 2011

அமெரிக்க கடற்படை அதிகாரிகள் விசேட போர்க்கப்பலொன்றில் விரைவில் இலங்கை செல்லவுள்ளனர் எனத் தெரியவருகிறது!

Wednesday, September 28, 2011
அவசர விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை அதிகாரிகள் விசேட போர்க்கப்பலொன்றில் விரைவில் இலங்கை செல்லவுள்ளனர் எனத் தெரியவருகிறது.

இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுப்போர்ப்பயிற்சி இலங்கை கடற்பரப்பில் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் இந்த அமெரிக்க போர்க் கப்பல் இலங்கை செல்லவுள்ளது.

அமெரிக்க கடற்படையினரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால், திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை வரும் அமெரிக்க கடற்படையின் விசேட அதிகாரிகள் உள்ளடங்கிய குழு இலங்கைக் கடற்படையின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளது என்றும் தெரியவருகிறது.

அதேவேளை, குறித்த போர்க்கப்பலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் செல்லவுள்ளனர் எனவும், இலங்கைக் கடற்பரப்பில் அவர்களும் கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவர் என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment