Wednesday, September 28, 2011கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயர்ட் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரீஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்.நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.சபையின் 66வது வருடாந்த மாநாட்டிலேயே இச் சந்திப்பு இடம்பெறறுள்ளது.
இரு தரப்பு உறவுகள் சம்பந்தமான சம்பிரதாயபூர்வமான இச் சந்திப்பில் கமான்வெல்த் அமைப்பு>, ஜனநாயகம்>.மனிதவுரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பேணல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசு இணங்களிற்கிடையேயான உறவை மீளக் கொணரும் நடவடிக்கையில் உத்வேகமாகச் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்ததோடு தகுந்த வரையறைகள் நேர்மையான அணுகுமுறைகள் என்பன பற்றிய அக்கறையின்மை குறித்துக் கவலையையும் தெரிவித்தார்.
மேலும் கனடிய வெளிவிவகார அமைச்சர் கனடியப் பிரதமர் காப்பர் இலங்கை 2013ல் வைக்கவுள்ள கமான்வெல்த் மாநாடு பற்றிய கரிசனையை வெளியிட்டதையும் சுட்டிக் காட்டியதையும் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பயாட் இலங்கையில் போரில் ஈடுபட்ட இரு தரப்பும் புரிந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான சுதந்திர விசாரணைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment