Wednesday, September 28, 2011குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் டோனர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment