Wednesday, September 28, 2011மகாஓயா பொலிஸ் விசேட அதிரடிப்படை முாகமில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முாகமைச் சேர்ந்த 30 உத்தியோகத்தர்களிடம் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் குழுக்களால் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த நபர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்படுகின்றது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும், தற்கொலை செய்துகொண்ட தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாய்த்தர்க்கத்திற்கான காரணம் இதுவரை காண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் சம்வம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment