Tuesday, September 27, 2011

வீரவில ஆயுத களஞ்சிய வெடிப்பில் ஒருவர் பலியானார்!

Tuesday, September 27, 2011
வீரவில ராணுவ முகாமில் சிறிய ரக ஆயுத களஞ்சியத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குறித்து ஆராய்வதற்கு ஐவர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆளுனர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவினால் இந்த குழுநியமிக்கப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர்கள் இன்று தமது விசாரணைகளை ஆராம்பிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தில் இரண்டு ராணுவ சிப்பாய் காயமடைந்ததுடன், ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரவில் சம்பவம் தொடர்பில் 122 ஆவது படைப்பிரிவின் கீழ் விசாரணை!

வீரவில இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தினையடுத்து பரவிய தீயை பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் நேற்றிரவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியதாக இருந்தது எனத் தெரிவித்துள்ள படை தரப்பு,

இதேவேளை, இந்த வெடிவிபத்துச் சம்பவத்தின் பின்னணியை அறிந்து கொள்ளும் வகையில் தென் மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவினால் குழு விசேட ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இராணுவ முகாமின் 122 ஆவது படைப்பிரிவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுவே இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுளளது. ஐவரைக் கொண்ட இந்தக் குழுவினர் இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு இராணுவத் தளபதியாலும் ஒரு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment