Tuesday, September 27, 2011கல்கிஸ்ஸ பாரகும் மாவத்தையில் ரீ 56 ரக துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடமிருந்து ரீ56 ரக தோட்டாக்கள் 28 உம், வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மொறட்டுவ மற்றும் ஹிதுரக்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் இருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment