Wednesday, September 21, 2011

இலங்கைக்கான அமெரிக்க தூதர் வன்னிக்கு திடீர் விஜயம்!

Wednesday, September 21, 2011
இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிஸ் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு (21.9.2011)வன்னி செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புகளையும் அவர் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் இரணைமடு செல்லும் அமெரிக்க தூதர் முன்னதாக முல்லைதீவு அரச அதிபர் எம்.பத்திநாதரை
முல்லைதீவு மாவட்ட செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ளார்.அதை தொடர்ந்து கிளிநொச்சி அரச அதிபரை சந்திக்கும் அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிஸ் மாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். அத்துடன் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சிதேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அங்கத்தவர்களையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் வன்னி மாவட்ட இராணுவ கட்டளை தளபதியையும் அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிஸ் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இலங்கைக்கெதிரான பொர்குற்றச்சாட்டுக்கள் ஜ.நாவில் முனைப்பு பெற்றுள்ள நிலையிலும் இலங்கை விடயத்தில் அமெரிக்கா அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையிலும் அமெரிக்க தூதரது வன்னி விஜயம் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment