Monday, September 12, 2011

ஐ நா அமர்வில் இலங்கையில் உரை இன்று!

Monday, September 12, 2011 ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 18 வது அமர்வு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இதன்போது இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமைதாங்கும் மனிதவுரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தசமரசிங்க இன்றைய அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இலங்கை நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் இவரது உரை இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் சர்வதேசத்திற்கு விளக்கமளிப்பார் என ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன.

அமர்வில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவினர் கடந்த தினத்தில் இலங்கையில் தற்போதைய நிலமைகள் குறித்து ஏனைய நாடுகளுக்கு தெளிவுப்படுத்தினர்.
இன்று ஆரம்பமாகும் அமர்வில் போது இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
இதனிடையே, செனல் 4 காணொளிக்கு பதிலான பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட காணொளி இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment