Thursday, September 22, 2011

இலங்கையுடன் அரசியல் தீர்வு குறித்து அமெரிக்கா பேசி வருகிறது:இலங்கை வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு-பெட்ரீஷியா புட்டெனஸ்!

Thursday, September 22, 2011
வடபகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்தினையும் அமெரிக்கா வழங்குமென தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீசியா ப்யூட்டினியஸ், இலங்கைத் தமிழர்களுக்காக அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்கா இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசிவருதாகவும் கூறியுள்ளார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெற்றீசியா ப்யூட்டினியஸ் இன்று வவுனியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வு தொடர்பில் செயற்றிட்டங்கள் முழுமை அடைந்துள்ளதாகத் திருப்தி கொள்ள முடியாது. ஆனால், இலங்கை அரசாங்கம் சிறப்பான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வவனியா விஜயத்தின்போது அவர், பல தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்தை நடத்தினார்.இடம் பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பாக அவர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ எஸ் எம் சாள்சுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.

No comments:

Post a Comment