Thursday, September 22, 2011

செயற்கை அவயவங்களைப் பொருத்தும் முகாமின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டள்ளது!

Thursday, September 22, 2011
வட மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கன்சுலர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயற்கை அவயவங்களைப் பொருத்தும் முகாமின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டள்ளது.

யாழ், கோண்டாவில் பிரதேச வைத்தியசாலையில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமான இந்த முகாம் சேவைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கான முகாமை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீா்மானித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கன்சுலர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த சேவைகள் மூலம் இதுவரை சுமார் 650 பேர் நன்மையடைந்துள்ளதாக அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 20 விசேட நிபுணர்களைக் கொண்ட இந்திய மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முகாமின் மூலம் மக்களுக்கு இலவசமாகவே அவயவங்கள் பொருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment