Thursday, September 22, 2011

ஐக்கிய நாடுகள் அமைப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை பலஸ்தீனம் முன்வைத்தால் அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த நேரிடும்-அமெரிக்கா எச்சரிக்கை!

Thursday, September 22, 2011
ஐக்கிய நாடுகள் அமைப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை பலஸ்தீனம் முன்வைத்தால் அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அப்பாஸிற்கும், அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

எனினும், அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறி பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தனிநாட்டு பிரகடனத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது.

பலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படுவதற்கான சரியான வழிமுறை பேச்சுவார்த்தைகளின் மூலமான இணக்கப்பாடே என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை வழங்குமாறு பலஸ்தீனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக்கொண்டால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதேவேளை, பலஸ்தீனத்தின் சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் மேற்குக் கரைப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேலுக்கு அமெரிக்க வழங்கி வரும் ஆதரவு பாரட்டுக்குரியது என அந்நாட்டு தலைவர் நெடன்யாகு தெரிவித்துள்hளர்.

No comments:

Post a Comment