Thursday, September 22, 2011

வடக்கின் இன்றைய நிலைமையினை யாழ் அரசாங்க அதிபர் உதவியுடனேயே சர்வதேசத்துக்கு அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்!

Thursday, September 22, 2011
வடக்கின் இன்றைய நிலைமையினை யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் உதவியுடனேயே சர்வதேசத்துக்கு அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு இலங்கையின் மனித உரிமை நடவடிக்கை குறித்து பொதுவாகவும் இதன் போது சந்தேகம் கொண்ட நாடுகளுக்கு தனித்தனியேயும் யாழ்.அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் உதவியுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதன்போது தமக்கு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு தருஸ்மன் அறிக்கை மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் முன்வைக்க எதுவித தீர்மானங்களும் அங்கு காணப்படவில்லை எனவும் அவ்வாறு முன்வைக்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment