Wednesday, September 07, 2011யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்பில் அச்சநிலைக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்ரம சிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்மமனிதர்கள் தொடர்பிலான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
மக்கள் இதனால் பீதியுடன் நாட்களை கழிக்கின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் அரசாங்கத்திடம் இருந்தும், அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தவரிவிட்டதாக ரணில் விக்ரமசிங்க இதன் போது குற்றம் சுமத்தினார்.
அரசாங்கத்தின் சார்பில் இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நிமால்சிறிபாலடி சில்வா, ரணில் விக்ரமசிங்க அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
வடமாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்றை நியமித்து, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க இதன் போது அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
யுத்த வெற்றியினால் கிடைக்கப்பெற்ற சமாதானத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் பொது மக்களின் நலனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே இவ்வாறான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், இது குறித்த அதிர்ச்சியடையவில்லை எனவும் அவர் தெரிவத்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு தேவை என கருதும் பட்சத்தில், அதற்கு சட்ட மூலங்களை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment