Sunday, September 25, 2011

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு-தங்கபாலு கண்டனம்!

Sunday, September 25, 2011
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி திருச்சியில் உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி திருச்சியில் காங்கிரசார் கலந்து கொண்ட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியாக நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் வன்முறையாளர்கள் கூட்டமாக புகுந்து தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பல காங்கிரஸ் சகோதர, சகோதரிகளுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் உண்ணாவிரதப் பந்தலை பிரித்தும், நாற்காலிகளை தூக்கிப் போட்டு உடைத்தும் கண்மூடித்தனமாக வெறித் தாண்டவமாடி இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் போர்வையில் இவ்வன்முறையை நடத்திய சமூக விரோதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது.

ஆனால் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும், மேலும் இது போன்ற வன்செயலில் அக்கட்சிக்காரர்கள் ஈடுபடாமலிருக்கும் வகையில் எச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment