Wednesday, September 14, 2011

ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னிக்க கூடாது - நாரயணசாமி

Wednesday,September 14,2011
ராஜீவ் காந்தி கொலையாளிகளை காங்கிரஸும் அதன் ஆதரவாளர்களும் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று இந்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ராஜிவ் காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறும் கருணை காட்டுமாறும் சில அமைப்பகள் மற்றும்; அரசியல் பிரமுகர்களின் தரப்பில் இருந்து கோரிக்கைகைகள் விடுக்கப்பட்டு வருகின்றன

இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக மத்திய அமைச்சர் நாரயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் சமாதானத்தை நிலை நாட்ட பெரிதும் பங்களிப்பு செய்தவர்.

எனவே அதனைக் கருத்திற்கொண்டு அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிக்குமாறு மத்திய அமைச்சர் நாரயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment