Wednesday, September 14, 2011

யாழ்ப்பாணத்தில் தமிழ் காவற்துறையினர் - ரொபட் ஒ பிளேக்!

Wednesday,September 14,2011
அதிகார பகிர்வு தொடர்பில் அரசாங்க தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் பேச்சுவார்தை நடத்த போவதாக வெளியான தகவல் மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கா உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளேக் கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

யுத்ததத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் முன்னேற்றமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் சமாதானம், ஜனநாயகம், சுபீட்சத்துடன் கூடிய இலங்கையை உருவாக்குவது அவசியம்.

அத்துடன் போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதற்கு இன்னும் பெருமளவு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு பொறுப்பு கூறும் வகையிவல் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடைமுறை தேவையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தி நிற்கிறது.

இலங்கையின் வடக்கு பிரதேசத்தில் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டியது அவசியம்.

துணை இராணுவ குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

அத்துடன் மர்ம மனிதர் தொடர்பான விடயங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

இந்த சம்பவங்கள் பாதுகாப்பு தொடர்பான நிச்சமற்ற தன்மை அதிகரிக்க காரணமாக அமைந்திருப்பதாக யாழ்ப்பாணத்தில் பலரும் தம்மிடம் தெரிவித்ததாக ரொபட் ஒ பிளேக் கூறினார்.

வடக்கில் தமிழ் காவற்துறையினரை பணிகளில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது.

அப்படியானால் அந்த பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படாது

அதேநேரம் செய்தியாளர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாகவும் அமெரிக்க அரசாங்கம் ஆழ்;ந்த கவலை கொண்டிருப்பதாகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கா உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளேக் செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment