Wednesday, September 21, 2011

கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது!

Wednesday, September 21, 2011
கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது.இதேவேளை, கனடியத் தமிழ் கொன்சவேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின் ஆளும் கட்சியான கொன்ச வேட்டிவ் கட்சியிடம் இலங்கை விவகாரம் தொடர்பான கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனேடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பாகவே இவ்வறிவிப்பு விடுக்கப்படுமெனவும் தெரிய வருகிறது.

No comments:

Post a Comment