Wednesday, September 21, 201166 வது ஐக்கிய நாடுகள் பொது அமர்வின் அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுதவிர, இலங்கை தூதுக்குழுவினர், அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இடம்பெறும் இரவு விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளனர்....
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி நாளை மறுதினம் ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார்...
இதன்போது, இலங்கையின் தற்கால நிலைமைகள், மற்றும் இலங்கை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் குறித்த விளக்கமளிக்கவுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
193 நாடுகளின் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இந்த மாநாட்டு சர்வதேச மக்களின் பல தரப்பட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
நியூயோக் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நேற்றைய தினம், கிளிண்டன் குளோபல் இனிஷியேற்றிவ், கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனினால், இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில், பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்
ஐக்கிய நாடுகளின் 66வது மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நியூயோக்கை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்..
No comments:
Post a Comment