Monday,September,05,2011
இம்மாத முடிவுக்குள் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் 1500 க்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர். தற்போது 100 முன்னாள் புலி பெண் போராளிகள் உட்பட 2700 முன்னாள் புலி உறுப்பினர்கள் மட்டுமே புனர்வாழ்வு நிலையங்களில் மீதமாக உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
கடந்த யுத்தகாலங்களில் 11,951 ஆண், பெண் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு 24 புனர்வாழ்வு நிலையங்களினூடாக புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவண்ணம் உள்ளனர்.இதற்கமைய தற்போது 2700 முன்னாள் புலி உறுப்பினர்கள் மட்டுமே புனர்வாழ்வு நிலையங்களில் மீதமாக உள்ளனர். இவர்களும் விரைவில் புனர்வாழ்வு செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
தற்போது கிழக்கில் 2 புனர்வாழ்வு நிலையங்களும் வவுனியாவில் 4 நிலையங்களும் யாழ்ப்பானத்தில் 1 நிலையமும் மட்டுமே இன்னும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கென இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment