Monday, September 12, 2011

மனித உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் தேவை-கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர்!

Monday, September 12, 2011
மனித உரிமைகள் தொடர்பில் எந்தவித முன்னேற்றங்களும் இல்லாதபட்சத்தில் தான் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தீர்வுகள் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளின் முன்னேற்றம், அது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் பிரதிநிதிக்கு கனடா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை ஏனைய நாடுகளின் தலைவர்களுக்கம் தான் எடுத்துக் கூறவுள்ளதாகவும் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் கனேடிய பிரதமர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரலாயத்தை தொடர்பு கொண்ட போது இலங்கையில் நிலையான சாமாதானத்தை ஏற்படுத்தவும் பொறுப்புடமை குறித்த விடயங்களின் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் கனடா தொடர்ந்து அதரவளிக்கும் என பதிலளிக்கப்பட்டது

No comments:

Post a Comment