Thursday, September 15, 2011

கராபிட்டிய பிரதேச முஸ்லிம்கள் வெளியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Thursday,September 15,2011
காலி நகர் கராபிட்டிய பிரதேச்ச்தில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் 30 வரையான முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப் பட்ட முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதின் மூன்று கட்டடங்களில் வாழந்து வரும் சுமார் முப்பது குடும்பங்களை சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களும் ஒரு சிங்கள குடும்பமும் நீதியமைச்சரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து நீதியமைச்சர் ஹகீம் சம்பந்த பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதை அடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் முஸ்லிம், சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பொருட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது இருந்த போதும் குறித்த குடும்பங்கள் வெளியேறவில்லை.

அந்த குடும்பங்களுக்கு இந்த மாதம் ௮ ஆம் திகதியுடன் தமது வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த குடும்பங்கள் நீதியமைச்சரை சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து அமைச்சர் மேற்கொண்ட முயற்சியால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை நீதியமைச்சர் மேற்கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment