Thursday,September 15,2011
தலதாமாளிகைக்கு குண்டுபோட உதவிய கேபி அரச மாளிகையில் இருப்பதாகவும் தலதாமாளிகையை பாதுகாத்தவரை அரசாங்கம் தாக்க முயற்சிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்தால் தோல்வியடையச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தலதாமாளிக்கைக்கு குண்டுத் தாக்குதல் நடத்தினர். எனது கவலை என்னவென்றால், தேசத்தை நேசிக்கும் அரசாங்கம் தலதா மாளிகையை பாதுகாத்த நெரஞ்சன் விஜயரட்ன முன்னோக்கி வரும்போது தலதா மாளிகைக்கு குண்டு போடத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்த கேபியை அரச இல்லத்தில் வைத்துள்ளனர். தாக்கியவர் அரச இல்லத்தில் பாதுகாத்தவர் மீது தாக்குதல் நடத்த முற்படுகின்றனர்.
கொழும்பில், கண்டியில், மாத்தளையில், நுவரெலியாவில் ஐக்கிய தேசியக் கட்சியியை எப்படி தோற்கடிப்பது என அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிலரை வைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவை ஒன்றும் சரிவராது. மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டனர்.
அதனை அரசாங்கத்தால் நிறுத்த முடியாது. நாங்கள் விருப்பு வாக்குகளுக்கு அடித்துக் கொள்கிறோம். வாக்குகளைப் பெற கட்சி குறித்து சிந்திப்பதில்லை. இது தேர்தல் வாக்குகளின் ஊடாகவே வெற்றிபெற முடியும். விருப்பு வாக்குகளால் அல்ல. அதனால் வெற்றித் தோல்வி எமது கைகளிலேயே உள்ளது.” என்றார் ரணில் விக்ரமசிங்க.

No comments:
Post a Comment