Monday, September 19, 2011

இலங்கை ராஜாதந்திரிகள் ஐ.நா. அமர்விற்காக நியுயோர்க்கில்!

Monday, September 19, 2011
இலங்கை வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார்.
அவர் 17.9.2011 மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேன் கீ மூனையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய தருசுமான் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஐனாதிபதிக்கும், ஐக்கிய நாடுகள் பொது செயலாளருக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.
பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டமை குறித்து தமது அதிருப்தியை இலங்கை ஜனாதிபதி வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது அமர்வின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர், அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இரவு விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, அங்கு மேலும் சில ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என அரச தரப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment