Monday, September 19, 2011

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும்-முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

Monday, September 19, 2011
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், இலங்கை முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள், வை.எம்.எம்.ஏ. பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தொப்பி அணிந்து படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் ரிஸ்வி முப்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்த நடவடிக்கையானது முஸ்லிம்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந் திருப்பதாக அவர் எடுத்துக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத் திணைக் களத்தின் தலைவருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக இச்சந்திப்பில் இலங்கை முஸ்லிம் கவுன் சில் சார்பில் கலந்துகொண்ட எம்.என். அமீன் கூறினார்.

சிலாபத்தில் இந்துக் கோவிலில் மிரு கங்களைப் பலிகொடுப்பதற்கு ஏற்படுத் தப்பட்ட தடையைச் சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இவ்வா றான பிரச்சினை ஏற்படலாம் என்பது பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் செய லாளருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

குழப்பநிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சிலாபத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறிய பாதுகாப்புச் செயலாளர், முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் நிகழ்வுக்கு தடை ஏற்படாதவாறு அனைத் துப் பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறியதாக அமீன் தெரிவித்தார்.

அதேநேரம், அநுராதபுரத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் குறித்தும் ஆராயப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கிய பாதுகாப்புச் செயலாளர், யுத்தம் முடிந்தாலும் சில சக்திகள் அமைதியைக் குழப்ப முயற்சிக்கின்ற போதும் அது தடுக்கப்படும். அநுராதபுரம் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கியதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட என்.எம்.அமீன் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கொழும்பு மாநகரசபைக்கு ஐ.ம.சு.மு. முன்னணி சார்பில் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் மிலிந்த மொரகொட, இலங்கை முஸ்லிம் கவுன் சில் பிரதிநிதிகள் சார்பில் என்.எம்.அமீன், ஹில்மி மொகமட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment