Monday, September 19, 2011

அளவ்வயில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது!

Monday, September 19, 2011
அளவ்வயில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

மூவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தினால் ரயில்வே திணைக்களத்துக்கு 75 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் அளவ்வ புகையிரத நிலையத்தில் மூன்று புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்தச் சம்பவத்தில் சாரதியொருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். உயிரி ழந்தவர்களுள், ரயில் சாரதியொருவரும், உதவியாளர் ஒருவரும், பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும் அடங்குகின்றனர்.

காயமடைந்தோர் அளவ்வ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். கவ லைக்கிடமான நிலையில் உள்ளோர் குருநாகல் வைத்தியசாலைக்கு இடமாற்றப் பட்டனர். கொழும்பு, கோட்டையிலிருந்து கண்டி நோக்கிப் பயணமான கடுகதி சொகுசு புகையிரதத்தை பயன்படுத்தி, பழுதடைந்த ரயில் வண்டியை தள்ளிச் சென்ற போது, பின்னால் வந்த மற்றுமொரு ரயில் கடுகதி ரயிலுடன் மோதுண்டது. இதனால் கடுகதி ரயிலின் காட்சிக்காண் கூடத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

புகையிரத இடிபாடுகளுக்குள் சிக்குண்டோர் பல மணித்தியால முயற்சிகளுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய ரயில்வே திணைக் களத்தினால் விசேட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. மின் தடையால் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

இதேநேரம், ரயில் பாதையின் புனரமை ப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந் துள்ளன. விபத்து காரணமாக ரயில் சேவைகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அளவ்வ ரயில் நிலையத்தின் இரட்டைப் பாதையில் ஒரு பகுதியூடாக போக்குவரத்து வழமைபோன்று இடம் பெறுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக தீர்க்கமான முடிவுக்கு இதுவரை வரமுடி யாதுள்ளதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு செயற்பட்ட விதம், சமிக்ஞை தொகுதி செயற்பட்ட விதம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சாரதி களின் தவறுகள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பாக கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அளவ்வ ரயில் விபத்து தொடர்பாக கண்டறிவதற்காக நேற்று முன்தினமிரவு அங்கு விஜயம் செய்த அமைச்சர் இது தொடர்பாக கண்டறிந்ததன் பின்னர், காயமடைந்த நோயாளர்களை பார்வையிடு வதற்காக அளவ்வ மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்தார்.

காயமடைந்தவர்களுள் இருவர் அளவ்வ வைத்தியசாலையிலும், 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment