Friday, September 30, 2011

சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

Friday, September 30, 2011
சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று(செப்-28) கொழுப்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த யுத்தகாலங்களில் மிகச் சிறந்த முறையில் தமது கடமைகளை மேற்கொண்ட இக் குழுக்கள், யுத்தத்திற்கு பின்னர் சரியாக செயற்படாததன் காரணத்தால் கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. கிரீஸ் மனிதன் போன்ற குழப்ப சூழ்நிலை ஏற்படாமல் அமைதியான, சமாதான சூழல் நாடெங்கிலும் நிலைத்திருக்கச் செய்ய சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடு மீண்டும் அவசியம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தமது பிரதேசங்களில் ஏற்படும் குழப்பசூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை பொலிஸாருடன் இணைந்து தீர்த்துக்கொள்ளம் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், 30000 வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் இங்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment