Friday, September 30, 2011

2,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி!.

Friday, September 30, 2011
பாலாசூர்: முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகணை, ஒரிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் உள்ள வீலர் தீவு மையத்தில் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபாரட்டரி, அக்னி-2 ஏவுகணைகளை உருவாக்கியது. இந்த ஏவுகணைகள் அணுகுண்டுகளை தாங்கியபடி 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி இலக்கை தாக்கி அழிக்க கூடியவை. இந்த ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அக்னி-2 ஏவுகணைகள் 20 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டவை. 17 டன் எடை கொண்டது. திட்டமிட்ட பாதையில் சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் படைத்தவை. இவற்றை ரயில், சாலை வழியாக எந்த இடத்துக்கும் எடுத்து செல்ல முடியும். இந்த அக்னி-2 ஏவுகணைகள் இன்று ஒரிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் உள்ள வீலர் தீவு சோதனை மையத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. அக்னி-2 இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்னி-2 ஏவுகணையை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியே சோதிக்க ராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். தொழில்நுட்ப கோளாறுகளால் கடைசி நேரத்தில் சோதனை தள்ளி வைக்கப்பட்டது. இப்போது சோதனை வெற்றி அடைந்துள்ளது.

No comments:

Post a Comment