Saturday, September 03, 2011
புலிகளின் அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் அடெல் பாலசிங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக லங்காபுவத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.பிரிட்டன் வாழ் தமிழ் அமைப்புக்களும், சிங்கள அமைப்புக்களும் இவ்வாறு வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் போராளிகளுக்கு சையனைட் வழங்கியமை மற்றும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபட வழிகாட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.
மற்றுமொரு நாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரை கொலை செய்வதற்கு அடெல் பாலசிங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வழக்குத் தொடரப்படவுள்ளது.
அடெல் பாலசிங்கம் சிறுவர்களுக்கு சயனைட் வழங்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலிகளின் சிறுவர் போராளிகள் தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக லங்கா புவத் செய்தி வெளியிடுள்ளது.
No comments:
Post a Comment