Saturday, September 03, 2011
2015 ஆம் ஆண்டளவில் நாட்டின் தனி நபர் வருமானத்தை ஐந்து ஆயிரம் டொலர்களாக மாற்றுவதுடன் மனைப்பொருளியல் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிடுகிறது.
இதன் மூலம் இலங்கையை வறுமையற்ற நாடொன்றாக மாற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அலரிமாளிகையில் இடம்பெற்ற 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அமைச்சு இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர 2015ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பொருளாதார திட்டங்களை இதன்போது தெளிவுபடுத்தினார்
நாட்டின் மொத்த பொருளாதார அபிவிருத்தி மனைப்பொருளியல் வரையில் பகிர்ந்து செல்லும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் திவி நெகும, கம நெகு போன்ற பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 9 பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் 20 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்காக 65 ஆயிரத்து 889.8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
13 ஆயிரத்து 101 கிராம செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment