Wednesday, September 21, 2011

வருட இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கலாம்; தவறினால் மக்களை அணிதிரட்டிப் போராட்டம்-புலிகூட்டமைப்பு மாவை!

Wednesday, September 21, 2011
அரசுக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம். தவறினால் ஜனநாயக ரீதியாக எம் மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளத் தயங்கோம்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வில்லியம் தோமஸ் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:

அரசுக்கு அழுத்தம்

அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா அமெரிக்கா போன்ற சர்வதேச அழுத்தங்கள் இதற்கு இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்பு பற்றிப் பேச வேண் டும் என்ற அழுத்தங்களும் அரசுக்கு விடுக்கப்பட்டன.

இதற்கும் போர் குற்றங்களுக்கும் சம்பந்தம் இருந்தாலும் அதனை சம்பந்தப்படுத்தாமல் சந்தர்ப்பத்தை விடாமல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதை கைவிட்டு விடாமல் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகின்றோம்.எமது அடிப்படைக் கோட்பாடுகளிலோ கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் இல்லாத நிலையில் எமக்கு அரசியல் தீர்வை நிறைவு செய்வதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு கூட்டமைப்பு பேச்சு மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.

அவ்வாறு இந்த ஆண்டு முடிவதற்குள் அரசின் பதில்சரியாகக் கிடைக்காவிட்டால் நாம் சர்வதேச அரங்கிலும் எமதுமக்கள் மத்தியிலும் கருத்துக்களை முன்வைத்து எம் மக்களை ஜனநாயக ரீதியாக அணி திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் இயங்கத் தயங்கமாட்டோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம் இளைஞர் சமுதாயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் எம்முடன் அணி திரள வேண்டும் என கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment