Wednesday, September 21, 201190 லட்ச ரூபா வெளிநாட்டு நாணயத்துடன் இந்தியப் பிரஜை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் செல்ல முற்பட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் சுங்க அதிகாரிகள் குறித்த பணத்தை மீட்டுள்ளனர்.
சிங்கப்பூருக்குச் சொந்தமான யூஎல் 312 என்னும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஆயத்தமான போது குறித்த இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment