Tuesday, September 06, 2011சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்த ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.
நாட்டின் வடகிழக்கு கரையோரப் பகுதியில் இரண்டாவது அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த அனல் மின் நிலையத்தின் ஊடாக 500 மெகா வெட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபைக்கும், இந்திய அனல்மின் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகள் எதிர்வரும் வருடம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டளவில் இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இந்த மின் நிலையத்தை அமைப்பதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தலதாரி ஹோட்டலில் ஒப்பந்தம் இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் முதலாவது அனல் மின் நிலையம் நுரைச்சோலை பகுதியில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்டது.
சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் ஊடாக 300 மெகாவெட் மின்சாரம் தற்போது விநியோகம் செய்யப்படுகின்றது.
இரண்டாம் கட்டம் பூர்த்தியானதன் பின்னர் மேலும் 300 மெகாவெட் மின்வாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment