Tuesday, September 6, 2011

வியட்நாம் - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதி!

Tuesday, September 06, 2011 இலங்கை, வியட்நாம் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், இரு நாடுகளுக்குமிடையிலான உயர் மட்ட குழுக்களின் பரிமாற்றம், மொழிப்பயிற்சி, இராணுவ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், மிதிவெடி மற்றும் குண்டு அகற்றல் போன்ற செயற்பாடுகளின் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளன.

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபாய ராஜபக்ஷ, வியட்நாம் தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் லெப்டினன் ஜெனரல் ங்குயன் ஷைஈ வின்ஹை ஹனோயில் நேற்று (செப்.05) சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறுதி ஒப்பந்தங்களையும் பரிமாற்றிக் கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும், இருநாட்டு இராணுவத்திற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுகளை உறுதியாகப் பேனும் வகையிலான ஒப்பந்தங்களும், ஞாபகர்த்த சின்னங்களும் கைச்சாத்திடப்பட்டடு பறிமாறிக் கொள்ளப்பட்டன.
கடந்த கால வியட்நாமின் தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போதும், தற்போதைய அபிவிருத்தி செயற்பாடுகளின் போதும், இலங்கை மக்கள் ஒன்றுபட்டு வழங்கிய ஒத்துழைப்பு குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் வின்ஹ் நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இச்சந்திப்பிக் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் உறுதி செய்யப்படுவதுடன், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான நட்புறவும் சிறந்த முறையில் வலுப்படுத்தப்படும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவுகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment