Friday, September 9, 2011

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட குழு உத்தரவிட்டுள்ளது!

Friday, September 09, 2011
வௌ்ளைக் கொடி விவகார வழக்கில் பிரதான சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு உத்தரவிட்டுள்ளது.

வேறு சிறைச்சாலைகளில் இருந்து புலிகள் இயக்க சந்தேகநபர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நலின் லத்துஹெட்டி தெரிவித்தார்.

அதேபோன்று சரத் பொன்சேகா வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் புலிச் சந்தேகநபர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

மேலும் சரத் பொன்சேகா சிறையில் உள்ள பகுதிக்கு புலிச் சந்தேகநபர்களை அழைத்துச் செல்வதை நிறுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment