Friday, September 9, 2011

கணவன் மனைவி களப்பில் மூழ்கி உயிரிழப்பு!

Friday, September 09, 2011
பொத்துவில், பானம களப்பில் மூழ்கி 35 வயது கணவனும் 25 வயது அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பானகல மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பிரேமசிறி என்ற நபரும் 25 வயதுடைய அவருடைய மனைவியான சுவேந்திரா ரத்நாயக்க ஆகியோருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment