Tuesday, September 13, 2011
கல்முனை மாநகர சபை முதன்மை வேட்பாளரும், ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயளாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான தேசபந்து சல்மா ஹம்ஸா 10.09.2011 அன்று அமெரிக்க தூதுவரான பற்றீசியா ஏ புட்டேனிஸ் அவர்ளை மட்டக்களப்பில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் முஸ்லிம்கள் தற்போது எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும், குறிப்பாக அண்மைக்காலத்தில் நடந்த கிறிஸ் மர்ம மனிதர் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு, முஸ்லிம்களின் பாதுகாப்பு சம்மந்தமான விடயங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு சம்மந்தமான விடயங்கள், பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள், மேற்படி விடயங்களில் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.
இதன் போது அமெரிக்கா தூதுவர் அவர்கள் இவ்விடயங்களை கவனத்திற் கொள்வதாகவும், இவற்றைத் தீர்ப்பதற்கான தன்னாலான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறியதாக நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

No comments:
Post a Comment