Friday 23rd of September 2011நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சசிகுமார் (வயது 32). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (28), சுப்பிரமணியன் (40), கலைமாறன் (46), மனோகரன் (42) ஆகிய 4 பேர் கடந்த 21.09.2011 அன்று மதியம் 2 மணியளவில் ஆறுகாட்டுத்துறையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 24 பாகம் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது 2 படகுகளில் 5 சிங்கள மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை நோக்கி வந்தனர். பட்டாக்கத்திகளுடன் வந்த சிங்கள மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் ஏறி அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.
பின்னர் மீனவர் சிவகுமாரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அவர்களை விரட்டினர். இதனை தொடர்ந்து மீனவர்கள் 4 பேரும் தாங்கள் சென்ற படகை கரைக்கு திருப்பினர். 22.09.2011 அனறு கரை திரும்பிய மீனவர்கள் 4 பேரும் கடலில் நிகழ்ந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment