Friday, September 23, 2011

பொதுச் சபையில் இன்று ஜனாதிபதி உரை!

Friday 23rd of September 2011
ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபைத் தொடரில் ஜனாதிபதி இன்று உரைநிகழ்த்தவுள்ளார்.

ஐநா பொதுச் சபையில் இலங்கை நேரப்படி இரவு ஒன்பது மணியளவில் ஜனாதிபதி உரைநிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐநா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் அரச தலைவர்கள் பலரை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடார் தலைவர் ஹமாட் பின் பயிஃபா அத்தானி, பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் உகண்டா உப ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர கூறியுள்ளார்.

No comments:

Post a Comment